ஹைதராபாத்தில் சுமை லாரியில் தீ விபத்து: 2 பேர் பலி
ஹைதராபாத்தில் சுமை லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.


ஹைதராபாத்தில் சுமை லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆந்திரத்தின் மேற்கு கோதாவரி மாவட்டம் நரசாபூரிலிருந்து சுமை லாரி ஒன்று மும்பைக்குச் சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மற்றொரு வாகனத்தின் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரியின் முன்பாகம் உரசி தீ விபத்து ஏற்பட்டு முற்றிலும் சேதமடைந்தது. விபத்தில் ஓட்டுநர் மற்றும் கிளினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் கிடைத்ததும், ராஜேந்திரநகர் காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்ட காவல்துறை குழு ஒன்று சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு படையின் உதவியுடன் தீயை அணைத்தது.
மேலும், வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...