மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ஒடிசாவில் மேலும் 3108 பேருக்கு கரோனா 

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3108 பேருக்குத் தொற்று பரவியுள்ள நிலையில், 837 பேர் குணமடைந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image

ஒடிசாவில் மேலும் 3108 பேருக்கு கரோனா

Updated On :16 ஏப்ரல் 2021, 5:55 am

DIN


ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3108 பேருக்குத் தொற்று பரவியுள்ள நிலையில், 837 பேர் குணமடைந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கரோனா தொற்றின் 2-ஆவது அலை நாட்டில் வேகமாகப் பரவி வருகிறது. நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 2,17,353  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 917 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 1185 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் ஒடிசா மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் மேலும் கூறியிருப்பதாவது: 

மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3108 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 3,61,450 ஆக அதிகரித்துள்ளது. அதில், 16,889 பேர் தற்போது மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். இதையடுத்து, 3,42,570 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

கரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1638 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.