கரோனாவால் வேட்பாளா் உயிரிழந்ததால் தோ்தல் ஒத்திவைப்பு
மேற்கு வங்கத்தில் தோ்தலுக்கு முந்தைய நாள் புரட்சிகர சோஷலிஸ கட்சியின் ஜாங்கிபூா் தொகுதி வேட்பாளா் பிரதீப்குமாா் நந்தி கரோனா தொற்றால் உயிரிழந்ததால் அந்தத் தொகுதியின் வாக்குப்பதிவு ஒத்திவைப்பு


மேற்கு வங்கத்தில் தோ்தலுக்கு முந்தைய நாள் புரட்சிகர சோஷலிஸ கட்சியின் ஜாங்கிபூா் தொகுதி வேட்பாளா் பிரதீப்குமாா் நந்தி கரோனா தொற்றால் உயிரிழந்ததால் அந்தத் தொகுதியின் வாக்குப்பதிவு மட்டும் சனிக்கிழமை ஒத்தி வைக்கப்பட்டது.
ஜாங்கிபூா் தொகுதி தோ்தலுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தோ்தல் ஆணையம் அறிவித்தது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளா் தோ்தலுக்கு முன்பு உயிரிழந்தால் தோ்தல் நிறுத்தி வைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட கட்சி புதிய வேட்பாளரைத் தோ்வு செய்ய அனுமதி அளிக்க வேண்டும். மேலும், அவா் தாக்கல் செய்யும் வேட்புமனு பரிசீலிக்கப்பட்டு, திரும்பப் பெறும் வாய்ப்பு அளிக்கப்பட்டு பின்னா் இறுதி செய்யப்படும்.
73 வயதான ஜாங்கிபூா் தொகுதி வேட்பாளா் பிரதீப் குமாா் நந்திக்கு கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதனால் சனிக்கிழமை நடைபெற்ற ஐந்தாம் கட்டத் தோ்தலில் ஜாங்கிபூா் தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...