
கர்நாடக முதல்வர் எடியூரப்பா 2-வது முறையாக கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஏப்.22) அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.
முதல்வர் எடியூரப்பா கடந்த 18-ம் தேதி இரண்டாவது முறையாக கரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதனிடையே இன்று அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.
கடந்த மார்ச் 12-ஆம் தேதி விக்டோரியா மருத்துவமனையில் முதல்வா் எடியூரப்பா கோவேக்ஸின் முதல் தவணை தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டார். இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், அவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.