/

ஆக்சிஜன் தட்டுப்பாடு: தில்லி மருத்துவமனையில் 25 பேர் பலி; மேலும் 60 பேர் கவலைக்கிடம்

தில்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 25 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :23 ஏப்ரல் 2021, 3:37 am

DIN

தில்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 25 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மட்டுமே ஆக்சிஜன் இருப்பதாகவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 60 நோயாளிகள் அபாயக் கட்டத்தில் இருப்பதாகவும்  மருத்துவமனையின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதனால் உடனடியாக ஆக்ஸிஜன் விநியோகம் செய்யுமாறு தில்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் மருத்துவமனையின் இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு நேற்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.