திரிபுராவில் 30 கரோனா நோயாளிகள் தப்பியோட்டம்
திரிபுராவில் கரோனா வார்டிலிருந்து 30 நோயாளிகள் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புப் படம்.

கோப்புப் படம்.
திரிபுராவில் கரோனா வார்டிலிருந்து 30 நோயாளிகள் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுரா மாநிலம் அகர்தலா பகுதியில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் 40க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் அவர்களில் 30 பேர் சிகிச்சை மையத்தில் ஜன்னலை உடைத்து புதன்கிழமை இரவு தப்பிவிட்டனர்.
மறுநாள் காலை இதுகுறித்து தெரிவர உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய 30 கரோனா நோயாளிகளை முகவரி மற்றும் மொபைல் நம்பரை கொண்டு தேடி வருகின்றனர்.
இதனிடையே தப்பியோடிய கரோனா நோயாளிகள் அனைவரும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள், திரிபுரா மாநில ரைபில்ஸ் பாதுகாப்பு படைப்பிரிவில் ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் திரிபுராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...