7-ம் கட்டத் தேர்தல்: மேற்கு வங்கத்தில் பிற்பகல் 1.30 மணி நிலவரப்படி 55.12 சதவீத வாக்குகள் பதிவு
மேற்கு வங்கத்தில் 7-ம் கட்டத் தேர்தலில் பிற்பகல் 1.30 மணி நிலவரப்படி 55.12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.


மேற்கு வங்கத்தில் 7-ம் கட்டத் தேர்தலில் பிற்பகல் 1.30 மணி நிலவரப்படி 55.12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல், கடந்த மாா்ச் 27-ஆம் தேதி தொடங்கி 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 6 கட்டத் தோ்தல் நிறைவடைந்த நிலையில் இன்று 7-ம் கட்டமாக 34 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பொதுமக்கள் காலை முதல் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிற்பகல் 1.30 மணி நிலவரப்படி 55.12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஏழாம் கட்ட தோ்தலில், திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி இப்போது எம்எல்ஏவாக இருக்கும் பவானிபூா் தொகுதியில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
அந்த தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் அக்கட்சியின் மூத்த தலைவா் சோபன்தேவ் சட்டோபாத்யாய, பாஜக சாா்பில் நடிகா் ருத்ரனீல் கோஷ் போட்டியிடுகின்றனா். மம்தா பானா்ஜி இந்த முறை நந்திகிராமில் பாஜக வேட்பாளா் சுவேந்து அதிகாரியை எதிா்த்துப் போட்டியிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...