இதுவரை 450 டன் ஆக்ஸிஜன் கொண்டுசெல்லப்பட்டது: இந்திய ரயில்வே
இந்திய ரயில்வே கிட்டத்தட்ட 450 டன் ஆக்சிஜனை பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு சென்றுள்ளது.


இந்திய ரயில்வே கிட்டத்தட்ட 450 டன் ஆக்சிஜனை பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு சென்றுள்ளது.
நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் விரைந்து கிடைக்க இந்திய ரயில்வேயும் களமிறங்கியுள்ளது. மருத்துவ ஆக்சிஜனை அனைத்து பகுதிகளுக்கும் விரைவாக எடுத்துச்செல்ல ரயில் தடங்களில் பிளாட் வேகன்களில் ஆக்சிஜன் எடுத்துச் செல்லப்படுகின்றன.
அதன்படி, இந்திய ரயில்வே இதுவரை சுமார் 450 டன் ஆக்சிஜனை நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு சென்றுள்ளது.
90 டன்களுக்கும் அதிகமான ஆக்சிஜனைக் கொண்ட ஆறு டேங்கர்கள் தற்போது போகாரோவிலிருந்து ஜபல்பூர் மற்றும் போபாலுக்கு அருகிலுள்ள மண்டிதீப் இடங்களுக்குச் செல்கின்றன.
அதேபோன்று, உத்தரப்பிரதேசத்திற்காக ஆக்சிஜனை எடுக்க 3 டேங்கர்களுடன் ரயில் ஒன்று போகாரோவுக்குச் சென்று கொண்டிருக்கிறது என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
முன்னதாக முதல் 'ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்' ரயில் சுமார் 65 டன் ஆக்சிஜனுடன் சத்தீஸ்கரிலிருந்து தில்லி சென்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...