கேரளத்தில் புதிதாக 35,013 பேருக்கு கரோனா தொற்று
கேரளத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 35,013 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 41 பேர் உயிரிழந்தனர்.


கேரளத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 35,013 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 41 பேர் உயிரிழந்தனர்.
கரோனாவால் இன்று (புதன்கிழமை) பாதிக்கப்பட்டோரின் பட்டியல் அடங்கிய அறிக்கையினை கேரள சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இதில் புதிதாக 35,013 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 15,5055 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,23,185ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு புதிதாக 41 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,211-ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...