இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச கரோனா தடுப்பூசி: மகாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல்

மகாராஷ்டிரத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச கரோனா தடுப்பூசி செலுத்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

News image
மகாராஷ்டிரத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி இலவசம்
Updated On :28 ஏப்ரல் 2021, 10:04 am

DIN

மகாராஷ்டிரத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச கரோனா தடுப்பூசி செலுத்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொற்று பாதிப்புக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. 

இந்நிலையில் புதன்கிழமை மகாராஷ்டிர மாநிலத்தின் அமைச்சர்வைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கரோனா தொற்று பரவல் நிலை, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கரோனா தடுப்பூசிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

மேலும் கரோனா தொற்று பரவலைத் தடுக்க மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசியை இலவசமாக செலுத்துவது குறித்த மாநில அரசின் முடிவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

முன்னதாக கேரளம், தமிழ்நாடு, ஆந்திரம், தில்லி, உத்தரகண்ட் உள்ளிட்ட 20 மாநில அரசுகள் இலவச கரோனா தடுப்பூசியை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.