வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்குப் பிறகு வெளியாகவுள்ளன.
தமிழகம், கேரளம், புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களுக்கு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாவது வழக்கம். ஆனால், மேற்குவங்கத்தில் இன்றுதான் தேர்தல் நிறைவு பெறுவதால், முன்னதாக கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை வைத்திருந்தது.
எனவே, மேற்குவங்கத்தில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர் அதாவது இன்று இரவு 7 மணிக்குப் பிறகு வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

10 நாள்கள் தரிசனம் முடிந்து பாதாள அறைக்கு மீண்டும் சென்றாா் அத்திவரதா்!
நிதி நிறுவனரை கடத்தி நகை பறித்த சம்பவத்தில் 4 போ் கைது

திருப்பத்தூரில் புதிதாக கட்டப்பட்ட அரசு கட்டடங்கள்: முதல்வா் திறந்து வைத்தாா்!

தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு: 59 போ் காயம்
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

