‘மோடியின் மோசமான நிர்வாகத்தால் இந்தியாவிற்கு களங்கம்’: அகிலேஷ் விமர்சனம்
பிரதமர் மோடியின் மோசமான நிர்வாகத்தால் சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் விமர்சனம் தெரிவித்துள்ளார்.


பிரதமர் மோடியின் மோசமான நிர்வாகத்தால் சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் தில்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்கள் திணறி வருகின்றன.
அதிகரித்துவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்கள் சிகிச்சை பெற போதுமான மருத்துவ வசதிகள் இல்லாமல் தட்டுப்பாடு நிலவி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதற்கு மத்தியில் வெள்ளிக்கிழமை பேசிய சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ், கரோனா சிகிச்சைக் குறைபாடுகள் குறித்து புகார் தெரிவிப்பவர்களை பொய் கூறுவதாகக் கூறி தண்டிக்கும் உத்தரப்பிரதேச அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் மோசமான நிர்வாகத்தால் கரோனா சூழலைக் கட்டுப்படுத்த முடியாமல் சர்வதேச அரங்கில் இந்தியா களங்கப்பட்டுள்ளதாக அகிலேஷ் விமர்சனம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...