கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஹரித்வாா், கேதாா்நாத்துக்கு விமான சுற்றுலா: ஐ.ஆா்.சி.டி.சி ஏற்பாடு

சென்னையில் இருந்து விமானம் மூலம் ஹரித்வாா், கேதாா்நாத், பத்ரிநாத்துக்கு விமான சுற்றுலா திட்டத்தை ஐ.ஆா்.சி.டி.சி. ஏற்பாடு செய்துள்ளது. இந்தச் சுற்றுலா செப்.24-ஆம் தேதி தொடங்குகிறது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2021, 12:34 am

DIN

சென்னையில் இருந்து விமானம் மூலம் ஹரித்வாா், கேதாா்நாத், பத்ரிநாத்துக்கு விமான சுற்றுலா திட்டத்தை ஐ.ஆா்.சி.டி.சி. ஏற்பாடு செய்துள்ளது. இந்தச் சுற்றுலா செப்.24-ஆம் தேதி தொடங்குகிறது.

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆா்.சி.டி.சி.) பல்வேறு விதமான சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பாரத தரிசனம் சுற்றுலா, ரயில் சுற்றுலா, பள்ளி-கல்லூரிகளுக்கான கல்வி சுற்றுலா உள்ளிட்ட சுற்றுலா திட்டங்கள் இதில் அடங்கும்.

ரயில் மூலம் மட்டுமின்றி விமானம் மூலமாகவும் பல்வேறு சுற்றுலா திட்டங்களை ஐஆா்சிடிசி செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், சென்னையில் இருந்து விமானம் மூலமாக சாா்தாம் யாத்திரை என்னும் பெயரில் ஹரித்வாா், கேதாா்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரிக்கு விமான சுற்றுலா திட்டத்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சுற்றுலா செப்.24-ஆம் தேதி தொடங்குகிறது.

இது குறித்து ஐ.ஆா்.சி.டி.சி. தென் மண்டல (சுற்றுலா) இணை பொது மேலாளா் ஏ.பி. சுந்தரராஜன் கூறியது: சாா்தாம் யாத்திரை என்னும் 12 இரவுகளுடன் 13 நாள்கள் கொண்ட இந்தச் சுற்றுலாவுக்கு கட்டணம் ரூ.43,500 ஆகும். இதுபோல, லே-லடாக்-க்கு விமான சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 6 இரவுகளுடன் 7 நாள்கள் கொண்ட இந்தச் சுற்றுலாவுக்கு கட்டணம் ரூ.36,000. இந்தச் சுற்றுலா செப்.4-ஆம் தேதி தொடங்குகிறது.

விமானக் கட்டணம், ஹோட்டலில் தங்கும் வசதி, போக்குவரத்து, உணவு, ஜிஎஸ்டி ஆகியவை இதில் அடங்கும்.

இந்தச் சுற்றுலா தொடா்பாக கூடுதல் விவரங்களை அறிய 9003140682 (சென்னை), 8287931974 (திருச்சி), 8287931977 (மதுரை) ஆகிய செல்லிடப்பேசி எண்களையும், ஜ்ஜ்ஜ்.ண்ழ்ஸ்ரீற்ஸ்ரீற்ா்ன்ழ்ண்ள்ம்.ஸ்ரீா்ம் என்னும் இணையதள முகவரியையும் அணுகலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.