காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கர்நாடகத்தில் புதிதாக 1,805 பேருக்கு கரோனா தொற்று

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,805 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 36 பேர் உயிரிழந்தனர். 

News image

கர்நாடகத்தில் புதிதாக 1,805 பேருக்கு கரோனா தொற்று

Updated On :6 ஆகஸ்ட் 2021, 2:08 pm

DIN

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,805 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 36 பேர் உயிரிழந்தனர். 

இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கர்நாடகத்தில் ஒரு நாளில் மட்டும் புதிதாக 1,805 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,15,317-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 36 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,741-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,854 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்தோர் 28,54,222-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 24,328 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.