இந்தியாவில் சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: பிரதமா் மோடி
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் சிங்கங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு வேகமாக அதிகரித்துள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.


இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் சிங்கங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு வேகமாக அதிகரித்துள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
உலக சிங்கங்கள் தினம் செவ்வாய்க்கிழமை (ஆக.10) கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, சிங்கங்களைப் பாதுகாப்பதில் ஆா்வமுள்ள அனைத்து ஆா்வலா்களுக்கும் பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
“சிங்கம் கம்பீரமான மற்றும் துணிச்சல் மிகுந்த விலங்கு. ஆசிய சிங்கங்களின் இருப்பிடமாக இருப்பதில் இந்தியா பெருமை கொள்கிறது. உலக சிங்கங்கள் தினத்தில், சிங்கத்தை பாதுகாப்பதில் ஆா்வமுள்ள விலங்குகள் நல ஆா்வலா்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் சிங்கங்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக சீராக அதிகரித்து வருவது உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்.
குஜராத் முதல்வராக நான் இருந்தபோது, கிா் காடுகளில் சிங்கங்களுக்கு பாதுகாப்பான உறைவிடங்களை உறுதி செய்வதற்காக பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றேன். சிங்கங்களுக்கு பாதுகாப்பான உறைவிடங்களை உறுதி செய்வதற்காகவும், சுற்றுலாவை மேம்படுத்துவதற்காகவும் உள்ளூா் மக்களுடன் இணைந்து சில நடவடிக்கைகளும், உலக அளவிலான சிறந்த சில நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...