கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஹிமாச்சல் நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ளதாக அச்சம்

ஹிமாச்சலப் பிரதேசம் கின்னூரில் நிலச்சரிவு ஏற்பட்டதில் பல வாகனங்கள் மண்ணுக்குள் சிக்கியுள்ளதாக அச்சம் கொள்ளப்படுகிறது.

News image

நிலச்சரிவு

Updated On :11 ஆகஸ்ட் 2021, 10:19 am

ஹிமாச்சலப் பிரதேசம் கின்னூரில் நிலச்சரிவு ஏற்பட்டதில் பல வாகனங்கள் மண்ணுக்குள் சிக்கியுள்ளதாக அச்சம் கொள்ளப்படுகிறது.

ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் கின்னூர் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் பல வாகனங்கள் மண்ணுக்குள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம் கொள்ளப்படுகிறது.

கின்னூர் மாவட்டம் ரெகாங் பியோ-சிம்லா நெடுஞ்சாலையில் இன்று (புதன்கிழமை) மதியம் 12:45 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது, டிரக், அரசு பேருந்து மற்றும் பல வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய - திபெத் எல்லை படை மீட்பு பணிகளை மேற்கொள்ள சம்பவ இடத்திற்கு சென்றுள்ளது. கடந்த பல வாரங்களாக, ஹிமாச்சலப் பிரதேசத்தில் கனமழை பெய்துவருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.