நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

‘எதிர்க்கட்சிகளை தவறாக சித்திரக்கவே மக்களவை முடிக்கப்பட்டது’: ஆதீர் ரஞ்சன் 

எதிர்க்கட்சிகளை தவறாக சித்திரக்கவே மக்களவை முன்கூட்டியே முடிக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதீர் ரஞ்சன் செளத்ரி தெரிவித்துள்ளார்.

News image

ஆதீர் ரஞ்சன் செளத்ரி(கோப்புப்படம்)

Updated On :11 ஆகஸ்ட் 2021, 7:52 am

ANI

எதிர்க்கட்சிகளை தவறாக சித்திரக்கவே மக்களவை முன்கூட்டியே முடிக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதீர் ரஞ்சன் செளத்ரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19 தொடங்கி நடைபெற்று வந்தன. ஆகஸ்ட் 13 வரை நடைபெறவிருந்த கூட்டம் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே முடிக்கப்பட்டன.

இதுகுறித்து ஆதீர் ரஞ்சன் செளத்ரி பேசியது:

“மக்களவை கூட்டம் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், முன்கூட்டியே முடிக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரச்னைகளை விவாதிப்பதற்கு முன்பே, எதிர்க்கட்சிகளை தவறாக சித்திரக்கவே கூட்டம் முடிக்கப்பட்டது.

பிரதமர் மோடியை மக்களவையில் இன்று தான் பார்த்தேன். எல்லாம் முடிந்த பிறகு மக்களவைக்கு வருகிறார். ஓபிசி மசோதாவை தவிர பிற மசோதாக்கள் விவாதிக்காமலேயே நிறைவேற்றப்பட்டது. அனைத்து மசோதாக்களும் ஒருசில நிமிடங்களிலேயே நிறைவேற்றப்பட்டன.

பெட்ரோல் விலை உயர்வு, வேளாண் சட்டம், பணவீக்கம், தடுப்பூசி குறித்து விவாதம் நடத்த கோரினோம். ஆனால், எங்கள் கருத்துகளை கேட்காமல், மசோதாக்களை 7 முதல் 8 நிமிடங்களில் நிறைவேற்றிவிட்டனர்.”
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.