காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் நிறுத்தம்

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தென்மேற்கு தில்லியில் 9 வயது சிறுமி பாலியல், கொலை சம்பவத்தில் அவரது அடையாளத்தை வெளிப்படுத்தியதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி உள்பட 6 பேரின் ட்விட்டர் பக்கம் நிறுத்தப்பட்டது. 

குறிப்பிட்ட ஒரு சில விவகாரங்களில் மட்டுமே சமூகவலைதளமான ட்விட்டர் நடவடிக்கை எடுப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டிய நிலையில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் இன்று நிறுத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பக்கத்தை பயன்படுத்த இயலாமல் ட்விட்டர் நிறுத்தியுள்ளது என அக்கட்சி இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்டிருந்தது. மற்றவர்களின் தனிப்பட்ட விவரங்களை அவர்களின் ஒப்புதல் இன்றி சில காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்டதாகவும் இது விதிகளை மீறிய செயல் என்றும் ட்விட்டர் குறிப்பிட்டுள்ளதை தனிப்பதிவாக காங்கிரஸ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளது.

தலித் சிறுமியின் அடையாளத்தை வெளியிட்டதற்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

எதிர்கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ட்விட்டர் நிறுவனத்தை அரசு மிரட்டியுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com