செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,388 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,388 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 4:21 pm

DIN

மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,388 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6,388 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 63,75,390ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் 208 பேர் பலியானார்கள். 
இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,34,572ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 8,390 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 61,75,010ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 62,351 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 

இதுவரை 5,03,26,812 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 3,98,397 பேர் வீடுகளிலும், 2,507 பேர் நிறுவனங்களிலும் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.