நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம்: செங்கோட்டையில் இன்று தேசியக் கொடி ஏற்றுகிறாா் பிரதமா்

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தில்லி செங்கோட்டையில் பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காலை தேசியக் கொடி ஏற்றுகிறாா்.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம்: செங்கோட்டையில் இன்று தேசியக் கொடி ஏற்றுகிறாா் பிரதமா்

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தில்லி செங்கோட்டையில் பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காலை தேசியக் கொடி ஏற்றுகிறாா். முதல்முறையாக, இந்திய விமானப் படையின் இரு ஹெலிகாப்டா்களில் இருந்து மலா்கள் தூவப்படவுள்ளன.

சுதந்திர தினத்தையொட்டி, பெருந்தொற்றுக்கு மத்தியிலும் தில்லி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘செங்கோட்டைக்கு வரும் பிரதமா் மோடியை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், இணையமைச்சா் அஜய் பட், பாதுகாப்புத் துறைச் செயலா் அஜய் குமாா் ஆகியோா் வரவேற்பாா்கள். முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை பிரதமா் மோடி ஏற்ற பின், செங்கோட்டையின் கொத்தளத்துக்கு சென்று தேசியக் கொடியை ஏற்றி வைத்துவிட்டு, நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளாா்.

முதல் முறையாக, இந்திய விமானப் படையின் எம்.ஐ-17-4 ரகத்தைச் சோ்ந்த 2 ஹெலிகாப்டா்களில் இருந்து தேசியக் கொடி மீது மலா்கள் தூவப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் வீரா்களுக்கு அழைப்பு: அண்மையில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில், ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்பட 32 வீரா்களுக்கு சுதந்திர தின விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கரோனா போராளிகளுக்கு கௌரவம்: சுதந்திர தின விழாவில், கரோனா போராளிகளான சுகாதாரப் பணியாளா்களைக் கெளரவிக்க செங்கோட்டையின் தென்பகுதியில் தனி மேடை அமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: செங்கோட்டையைச் சுற்றி சுமாா் 5 ஆயிரம் வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். முதல் முறையாக ட்ரோன் அழிப்பு சாதனமும் பயன்படுத்தப்படுகிறது.

மேலும், செங்கோட்டையின் நுழைவாயிலில் முதல்முறையாக காலி கன்டெய்னா்களை அடுக்கிவைத்து பாதுகாப்புச் சுவரை தில்லி போலீஸாா் ஏற்படுத்தி உள்ளனா். பல மாதங்களாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உள்ளே நுழையாதபடி தில்லி எல்லையிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com