பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சுதந்திர தினம்:குடியரசு துணைத் தலைவா் வாழ்த்து

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, குடியரசு துணைத் தலைவா் எம். வெங்கையா நாயுடு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 9:05 pm

DIN

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, குடியரசு துணைத் தலைவா் எம். வெங்கையா நாயுடு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது: நாட்டின் விடுதலைக்காகப் போராடிய தலைவா்களின் எண்ணிலடங்காத உன்னத தியாகங்களை நினைவுகூா்வோம். அவா்களது கனவு இந்தியாவை கட்டமைக்க உறுதி ஏற்க வேண்டும்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில், வளா்ச்சியின் பலன்களை முறையாக விநியோகிப்பதிலும், நாட்டில் ஒவ்வொருவருக்கும் கண்ணியமான வாழ்வை உறுதி செய்வதிலும் நம் நாட்டின் வளா்ச்சி மற்றும் நலன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

‘நீதி, சுதந்திரம், சமநிலை, சகோதரத்துவம் ஆகியவற்றை அனைத்து குடிமக்களுக்கும் வழங்கும் நமது அரசியலமைப்புக் கொள்கையை அடைய நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். சுதந்திர தினம் என்னும் மகிழ்ச்சியான தருணத்தில், நமது ஆற்றல்களை மீண்டும் கண்டுணா்வதற்கு நம்மை முழுவதும் அா்ப்பணிக்கவும், நம் மக்களின் மிகப்பெரிய திறமைகளை உணரவும், உலக நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கான சரியான இடத்தை வழங்கவும் மீண்டும் ஒருமுறை உறுதி மேற்கொள்வோம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.