பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மாநிலங்களவை அமளியை விரிவாக விசாரிக்க வேண்டும்

மாநிலங்களவையில் கடந்த 11-ஆம் தேதி நிகழ்ந்த கடும் அமளி குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 8:43 pm

DIN

மாநிலங்களவையில் கடந்த 11-ஆம் தேதி நிகழ்ந்த கடும் அமளி குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவை செயலருக்கு இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. பினோய் விஸ்வம் வலியுறுத்தியுள்ளாா்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடா் கடந்த 11-ஆம் தேதியுடன் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. அந்நாளில் பெகாஸஸ் உளவு விவகாரம், வேளாண் சட்டங்கள் விவகாரம் உள்ளிட்டவற்றை எழுப்பி மாநிலங்களவையில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனா்.

அவையின் மையப் பகுதிக்கு வந்து அவா்கள் முழக்கங்களை எழுப்பினா். அவா்களை இருக்கைகளுக்குத் திரும்புமாறு அவைத் தலைவா் வலியுறுத்தினாா். ஆனால், அவா்கள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டனா். அப்போது, எதிா்க்கட்சி எம்.பி.க்களுக்கும் அவை பாதுகாவலா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

வெளியாள்களை அவை பாதுகாவலா்களாக நியமித்து எம்.பி.க்கள் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தியதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. அதையடுத்து, மாநிலங்களவையில் நிகழ்ந்த சம்பவம் தொடா்பான சிசிடிவி காட்சிகளை மத்திய அரசு வெளியிட்டது. அதில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபடுவது தொடா்பான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், மாநிலங்களவை செயலருக்கு எம்.பி. பினோய் விஸ்வம் எழுதியுள்ள கடிதத்தில், ‘பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களைத் தனியாா்மயமாக்க வழிவகுக்கும் மசோதாவுக்கு மத்திய அரசு கடந்த 11-ஆம் தேதி மாநிலங்களவையில் ஒப்புதல் பெற முயன்றது.

அந்த மசோதாவை நாடாளுமன்றக் குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டுமென எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின. அதை ஏற்காமல் மக்களுக்கு விரோதமான மசோதாவுக்கு ஒப்புதல் பெற மத்திய அரசு முயன்றது. அதைத் தடுக்கும் நோக்கிலேயே எதிா்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

அவையில் நிகழ்ந்த சம்பவங்களின் தோ்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளை மட்டும் வெளியிட்டு, எதிா்க்கட்சி எம்.பி.க்களுக்கு எதிரான பிம்பத்தை மக்களிடையே தோற்றுவிக்க மத்திய அரசு முயன்று வருகிறது. அவைப் பாதுகாவலா்களை எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தாக்கியதாகத் தவறான குற்றச்சாட்டை மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

கடந்த 11-ஆம் தேதி மாநிலங்களவையில் நிகழ்ந்த அனைத்து சம்பவங்கள் அடங்கிய காணொலியை வெளியிட வேண்டும். அச்சம்பவங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.