ஆப்கன் மக்கள் அச்சத்தில் உள்ளனர்: இந்தியா
ஆப்கானிஸ்தான் மக்கள் அச்சத்தில் இருப்பதாக ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் டிஎஸ் திருமூர்த்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் திங்கள்கிழமை தெரிவித்தார்.

கோப்புப்படம்

கோப்புப்படம்
ஆப்கானிஸ்தான் மக்கள் அச்சத்தில் இருப்பதாக ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் டிஎஸ் திருமூர்த்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அந்த நாட்டு மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான முயற்சிகளைக் கடுமையாக மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கும் சூழலே தென்படுகிறது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் சூழல் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டத்தைக் கூட்டியது.
இதையும் படிக்க | ஆப்கன் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஐ.நா.
கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் கூறியது:
"ஆப்கானிஸ்தானின் அண்டை நாடாக, அந்த நாட்டு மக்களின் நண்பராக அங்கு நிலவும் தற்போதைய சூழல் இந்தியாவுக்குப் பெரும் கவலையளிக்கிறது. ஆப்கன் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர்."
முன்னதாக, ஆப்கானிஸ்தான் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...