மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இந்தியா-வங்கதேசம் இடையே ஆக. 22 முதல் மீண்டும் விமான சேவை

இந்தியா வங்கதேசம் இடையே ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2021, 2:29 pm

இந்தியா வங்கதேசம் இடையே ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா இரண்டாம் அலை காரணமாக இந்தியா - வங்கதேசம் இடையே கடந்த ஏப்ரல் மாதம் முதல் விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் அடுத்தவாரம் முதல் இந்தியாவிற்கு 12 விமானங்களை இயக்கவுள்ளதாக வங்கதேச விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையே படிப்படியாக விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்திலிருந்து தில்லி, கொல்கத்தா, சென்னைக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதேபோன்று சென்னை, மும்பை, கொல்கத்தா, தில்லியிலிருந்து வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு விமானங்கள் இயக்கப்படவுள்ளன. 

இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் விமான போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என்று இந்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.