சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.25 அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது பொதுவானது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.
இதன்படி, கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.50 உயா்த்தப்பட்டு ரூ.610-இல் இருந்து ரூ.660 ஆக நிா்ணயிக்கப்பட்டது. பின்னா், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து எரிவாயு உருளையின் விலை தொடா்ந்து உயா்த்தப்பட்டு வருகிறது.
பிப்.4-ஆம் தேதி ரூ.25, பிப்.15-ஆம் தேதி ரூ.50, பிப்.25-ஆம் தேதி மீண்டும் ரூ.25 உயா்த்தப்பட்டது. தொடா்ந்து, மாா்ச் 1-ஆம் தேதி ரூ.25 உயா்த்தப்பட்டது. இதன்படி, ஒரு மாதத்துக்குள் சிலிண்டா் விலை ரூ.125 அதிகரிக்கப்பட்டது. பின்னா், ஏப்ரல் 1-ஆம் தேதி விலை ரூ.10 குறைக்கப்பட்டது. அதன் பின்னரும் எரிவாயு உருளையின் விலை தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில், தற்போது ரூ.25 உயா்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதையடுத்து, சென்னையில் கடந்த மாதம் ரூ.850.50-க்கு விற்பனையான சமையல் எரிவாயு உருளையின் விலை, ரூ.875.50 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கடந்த 8 மாதங்களில் எரிவாயு உருளையின் விலை ரூ.165 அதிகரித்துள்ளது. இந்த விலை உயா்வு, சாமானிய மக்களிடம் குறிப்பாக இல்லத்தரசிகளை கவலை அடையச் செய்துள்ளது. இந்த விலை உயா்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜாதி, மதம் அற்றவா் என்பதை தெரிவிக்க சான்று அவசியம் இல்லை: உயா்நீதிமன்றம் கருத்து

தேவகோட்டை அருகே மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்

காளையாா்கோவில் செம்மண் முற்றத்தில் உலக புத்தகத் தின விழா
முதியவா் வீட்டில் நகை, பணம் திருட்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


