திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ராஜஸ்தான்: இரண்டு லாரிகள் நேருக்குநேர் மோதி எரிந்ததில் 4 பேர் பலி

ராஜஸ்தானின் அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் இரு வாகனங்கள் மோதி தீப்பற்றி இருந்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

News image
Updated On :17 ஆகஸ்ட் 2021, 9:59 am

DIN

ராஜஸ்தானின் அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் இரு வாகனங்கள் மோதி தீப்பற்றி இருந்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் தேசிய நெடுஞ்சாலை (NH8)இல் செவ்வாய்க்கிழமை அதிகாலை எதிரெதிரே வந்த இரண்டு லாரிகள் மோதிக்கொண்டன. இதில், இரண்டு லாரிகளும் தீப்பிடித்து எரிந்தன. 

பின்னர் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.

இரண்டு லாரிகளும் டிவைடரைக் கடக்கும்போது இரண்டும் ஒன்றோடொன்று மோதி தீப்பற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

இரண்டு லாரிகளிலும் மொத்தம் ஐந்து பேர் இருந்த நிலையில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஆதர்ஷ் நகரின் துணை ஆய்வாளர் கன்ஹையா லால் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.