புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 97.52 சதவீதம் பேர் குணம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,178 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 440 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை சார்பில்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

News image
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 97.52 சதவீதம் பேர் குணம்
Updated On :18 ஆகஸ்ட் 2021, 6:39 am

DIN

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,178 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 440 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை சார்பில்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதே நேரம் நேற்று ஒரே நாளில் சிகிச்சையில் இருந்த 37,169 பேர் குணமடைந்து வீடு திரும்பியதை அடுத்து இதுவரை நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 3,22,85,857 பேரில் 3,12,85,923 பேர் குணமடைந்திருக்கிறார்கள்.

இதனால் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 97.52 சதவீதம் பேர் முற்றிலும் நோயின் தாக்கத்தில் இருந்து மீண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் கடந்த வருடத்திலிருந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) வரை கரோனாவால் 4,32,519 பேர் இறந்திருப்பதாகவும் தற்போது 3,67,415 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நோய்த் தொற்றுகளை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் மிக வேகமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 56.6 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.