ஈரான் : கடந்த 24 மணி நேரத்தில் 50,228 பேருக்கு கரோனா பாதிப்பு
ஈரானில் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் 50,228 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.


ஈரானில் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் 50,228 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க | ஈரான் : அதிகரித்து வரும் கரோனா பலி
மேலும் இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் , ' இதுவரை 45.17 லட்சம் பேர் கரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள் அவர்களில் 37.86 லட்சம் பேர் நோயில் இருந்து மீண்டு விட்டார்கள்.5,163 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்கள் . மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 625 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் ' எனத் தெரிவித்திருக்கிறார்கள்.
நேற்று ( செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி 1.57 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசியும் அவர்களில் 47.14 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் எடுத்துக்கொண்டனர்.
தற்போது அதிகரித்து வரும் கரோனா பரவலால் அங்கு ஊரடங்கு போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...