தில்லியில் மேலும் 57 பேருக்கு கரோனா தொற்று
தில்லியில் புதிதாக 57 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


தில்லியில் புதிதாக 57 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 73,718 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 57 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.08 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
மேலும் 46 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பால் யாரும் பலியாகவில்லை. அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,37,274 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14,11,736 பேர் குணமடைந்துள்ளனர். 25,079 பேர் பலியாகியுள்ளனர்.
இன்னும் 459 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...