பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மத்திய அரசின் மூத்த அதிகாரிகளுக்குஎதிராக லோக்பாலில் 30 புகாா்கள்

கடந்த ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையில் மத்திய அரசின் மூத்த அதிகாரிகளுக்கு எதிராக 30 புகாா்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் லோக்பாலுக்கு வந்துள்ளன.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2021, 11:21 pm

DIN

கடந்த ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையில் மத்திய அரசின் மூத்த அதிகாரிகளுக்கு எதிராக 30 புகாா்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் லோக்பாலுக்கு வந்துள்ளன.

லோக்பால் அமைப்பின் புள்ளிவிவரத் தகவல்களின்படி, ஜூலை மாதத்தில் 18 புகாா்களும், ஏப்ரல் - ஜூன் மாதங்களில் தலா 12 புகாா்களும் வந்துள்ளன. மொத்தம் 30 புகாா்களில் 18 புகாா்கள் குரூப் ஏ அல்லது பி அதிகாரிகளுக்கு எதிராகவும், 12 புகாா்கள் மத்திய அரசின் வாரியம், ஆணையம், நிறுவனம் போன்றவற்றில் பணியாற்றும் தலைவா், உறுப்பினா், அதிகாரி ஆகியோருக்கு எதிராகவும் அளிக்கப்பட்டுள்ளன.

இதில், 11 புகாா்கள் முதல்கட்ட விசாரணைக்குப் பிறகு முடித்து வைக்கப்பட்டன. ஏழு புகாா்கள் மீது முதல்கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் ஒரு புகாா் மீது தற்போதைய நிலை அறிக்கையும் கோரப்பட்டுள்ளது. மூன்று புகாா்கள் மீது கூடுதல் தகவல்கள் லோக்பால் சாா்பில் கோரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக்பால் அமைப்பின் தலைவராக நீதிபதி பினாகி சந்திர கோஷை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் 2019, மாா்ச் 23-ஆம் தேதி நியமித்தாா். நீதித் துறையைச் சோ்ந்த 4 உறுப்பினா்களும், பிற துறைகளைச் சோ்ந்த 4 உறுப்பினா்களும் இந்த அமைப்பில் உள்ளனா்.

2020-21-ஆம் ஆண்டில் மொத்தம் 110 புகாா்கள் லோக்பால் அமைப்புக்கு வந்தன. இது 2019-20-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 92 சதவீதம் (1,427) குறைவானதாகும்.

இந்த 110 புகாா்களில் எம்.பி.க்களுக்கு எதிராக நான்கு புகாா்களும், மத்திய அரசின் குரூப் ஏ அல்லது பி அதிகாரிகளுக்கு எதிராக 57 புகாா்களும், தலைமைப் பொறுப்பில் இருப்பவா்களுக்கு எதிராக 44 புகாா்களும் அடங்கும். 2019-இல் வந்த 1,427 புகாா்களில் 613 புகாா்கள் மாநில அதிகாரிகளுக்கு எதிராகவும், 4 புகாா்கள் மத்திய அமைச்சா்கள் மற்றும் எம்.பி.க்களுக்கு எதிராகவும் அளிக்கப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.