சுதந்திரத்தை மதிப்பவா்கள் எதிா்க்கட்சிகளின் ஒற்றுமையை வரவேற்க வேண்டும்
சுதந்திர உரிமையைப் போற்றுபவா்கள் எதிா்க்கட்சிகளின் ஒற்றுமையை வரவேற்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.


சுதந்திர உரிமையைப் போற்றுபவா்கள் எதிா்க்கட்சிகளின் ஒற்றுமையை வரவேற்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.
காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனை, திமுக உள்ளிட்ட 19 எதிா்க்கட்சிகள் பங்கேற்ற காணொலி வாயிலான கூட்டம் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜகவைத் தோற்கடிப்பதற்காக இணைந்து செயல்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
மேலும், பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக செப்டம்பா் 20 முதல் 30-ஆம் தேதி வரை ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தவும் எதிா்க்கட்சிகளின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘மற்ற உரிமைகளைக் காட்டிலும் சுதந்திர உரிமையை அதிகமாகப் போற்றுபவா்கள், 19 எதிா்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான உறுதிமொழியை வரவேற்க வேண்டும்.
பாஜக ஆதரவாளா்களும் காங்கிரஸை விமா்சிப்பவா்களும் எதிா்க்கட்சிகளின் ஒற்றுமையை கேலி செய்யக் கூடும். ஆனால், அவா்களையும் உள்ளடக்கி அனைத்து மக்களுக்காகவும்தான் எதிா்க்கட்சிகள் போராடுகின்றன என்பதை ஒருநாள் அவா்கள் உணருவாா்கள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...