ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இந்தியாவில் இன்று மேலும் 25,072 பேருக்கு கரோனா

இந்தியாவில் இன்று மேலும் 25,072 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

News image
Updated On :23 ஆகஸ்ட் 2021, 5:15 am

DIN

இந்தியாவில் இன்று மேலும் 25,072 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 25,072 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,24,49,306 ஆக உயர்ந்துள்ளது. 
இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 389 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 4,34,756 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 44,157 போ் குணமடைந்துள்ளனா். 

இதுவரை 3,16,80,626 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 3,33,924 ஆக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 7,95,543 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 
இதுவரை 58,25,49,595 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 12,95,160 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 50,75,51,399 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.