காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் நேற்று (ஆக-23 திங்கள்கிழமை) பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளும் நடைபெற்ற தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகரின் அலூச்சி பாக் பகுதியில் தீவிர தேடுதலில் இருந்த பாதுகாப்பபி படையினரிடம் சிக்கிக்கொண்ட தீவிரவாதிகள் முதலில் தாக்குதலை தொடர்ந்திருக்கிறார்கள்.
பின் பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறை இணைத்து நடத்திய தாக்குதலில் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்த்த முக்கிய பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் டிஆர்எப் எனப்படும் 'தி ரெசிஸ்டன்ஸ் பிரென்ட் ' என்கிற அமைப்பிலும் தொடர்புடையவர்கள்.
இதையும் படிக்க | பாராலிம்பிக் துவக்க விழாவில் மாரியப்பன் பங்கேற்கமாட்டார்
தீவிரவாதிகள் அப்பாஸ் ஷேக் மற்றும் சாகிப் மன்சூர் இருவரும் காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியவர்கள் என்றும் பல குண்டுவெடிப்பு வழக்கிலும் தொடர்புடையவர்கள் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தாக்குதலை வெற்றிகரமாக நடத்திய காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் காவல்துறை தலைவர் விஜயகுமார்.
மேலும் அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை காவல்துறையினர் கைப்பற்றியிருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை: நாமக்கல்லில் 106 நுண்பாா்வையாளா்களுக்கு பயிற்சி

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி ரூ. 48.28 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

குதிரை வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


