புதுவை அமைச்சரவைக் கூட்டம் தொடக்கம்
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.


புதுவையில் 15வது சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆளுனர் உரையுடன் தொடங்கி நடைபெறுகிறது.
இதற்காக, பட்ஜெட் இறுதி வடிவம் தயாரிப்பு தொடர்பாக முதல்வர் என். ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை ஆலோசனை கூட்டம், புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் புதன்கிழமை பகல் 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
வியாழக்கிழமை மாலை முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில், அதில் இடம்பெறும் அம்சங்கள் குறித்து, அமைச்சர்கள் ஏ. நமச்சிவாயம், க. லட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சாய் சரவணகுமார், தலைமைச் செயலர் அஸ்வினி குமார் மற்றும் அரசு செயலர்கள் பங்கேற்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...