நாட்டில் விளையாட்டு வீரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் உறுதியளித்துள்ளார்.
20 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளுடன் அமைச்சர் அனுராக் தாக்குர் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் நமது வீரர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்தனர்.
அமித் கத்ரி, ஷாலி சிங் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர். நீளம் தாண்டுதல் போட்டியில் ஒரு சென்டி மீட்டர் இடைவெளியில் ஷாலி தங்கப் பதக்கத்தை தவறவிட்டார். இந்திய வீரர்களாலும் விளையாட்டில் சாதிக்க இயலும் என்பதை இது காட்டியுள்ளது.
விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடினேன். அவர்களுக்கு செய்து கொடுக்கப்பட்ட வசதிகள் குறித்து கேட்டறிந்தேன். விளையாட்டு வீரர்களின் கோரிக்கைகளை கேட்டு அதனை நிறைவேற்றும் பணிகளை அரசு செய்யும். ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை அவர்கள் அளிக்க வேண்டும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாட்ஸ்ஆப்பில் பெண்ணுடன் பேசியதாக சந்தேகம்! இளைஞர் மீது சிறுநீர் கழித்துக் கொடூரம்!

திருவல்லிக்கேணி, எழும்பூர், தி. நகரில் விஜய் நாளை பிரசாரம்!

9 மாத கடின உழைப்பு... கௌதம் ராம் கார்த்திக் பகிர்ந்த எடைக் குறைப்பு விடியோ!

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
வீடியோக்கள்

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை


