

கேரளம் மற்றும் மகாராஷ்டிரம் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளனர்.
நாடு முழுவதும் கரோனா தொற்றின் பரவல் குறைந்து வரும் நிலையில், மகாராஷ்டிரம் மற்றும் கேரளம் மாநிலங்களில் மட்டும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
தொற்று பரவலில் முதல் இடத்தில் இருக்கும் கேரளத்தில் நேற்று ஒரே நாளில் 31,445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1,70,312 பேர் சிகிச்சையில் உள்ளனர். அடுத்த இடத்தில் இருக்கும் மகாராஷ்டிரத்தில் 5,031 பேருக்கு நேற்று தொற்று உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, கேரளம் மற்றும் மகாராஷ்டிரம் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் உயர்அதிகாரிகளுடன் காணொலி மூலமாக இன்று மாலை 5 மணிக்கு மத்திய சுகாதாரத்துறை மற்றும் உள்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.