தடுப்பூசி செலுத்துவதில் ம.பி. புதிய சாதனை
மத்தியப் பிரதேசத்தில் புதன்கிழமை மட்டும் ஒரேநாளில் 24.20 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.


மத்தியப் பிரதேசத்தில் புதன்கிழமை மட்டும் ஒரேநாளில் 24.20 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
அந்த மாநிலத்தில் இது புதிய சாதனையாக மாநில சுகாதாரத் துறை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 21-ம் தேதி ஒருநாளில் 17.62 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதே சாதனையாக இருந்துள்ளது. இந்த நிலையில், புதன்கிழமை 24.20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | நாட்டில் புதிதாக 46 ஆயிரம் பேருக்கு கரோனா
இதுபற்றி தடுப்பூசி செலுத்தும் திட்டத்துக்கான கூடுதல் இயக்குநர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசியது:
"புதன்கிழமை மட்டும் மத்தியப் பிரதேசத்தில் 24.20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. தடுப்பூசி செலுத்தும் மாபெரும் திட்டத்தின் முதல் நாள் பதிவு இது. இந்த எண்ணிக்கை வியாழக்கிழமை பதிவு செய்யப்பட்டன. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...