புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

இந்தியாவில் தடுப்பூசி விநியோகத்தில் சாதனை

50 சதவிகிதத்திற்கு மேலான வயது வந்தோருக்கு குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனைப் படைத்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஆகஸ்ட் 2021, 7:10 am

DIN

50 சதவிகிதத்திற்கு மேலான வயது வந்தோருக்கு குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனைப் படைத்துள்ளது.

கரோனா மூன்றாம் அலையை தவிர்க்கும் வகையில் தடுப்பூசி விநியோகம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 50 சதவிகிதத்திற்கு மேலான வயது வந்தோருக்கு குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனைப் படைத்துள்ளது. இந்தாண்டின் ஆரம்பத்தில் தடுப்பூசி விநியோகம் தொடங்கப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட 61 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா ட்விட்டர் பக்கத்தில், "முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா பெரிய மைல்கல்லை படைத்துள்ளது. 

அனுமதிக்கப்பட்டவர்களில் 50 சதவிகிதத்திற்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியா இதை தொடர வேண்டும்
கரோனாவுக்கு எதிராக போரிட வேண்டும்

இதன்மூலம் குறிப்பிடத்தக்க மக்கள் கரோனாவுக்கு எதிரான பாதுகாப்பை பெற்றுள்ளனர்" என பதிவிட்டுள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், கிட்டத்தட்ட 80 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதன் மூலம் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 61 கோடியை தாண்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.