உலகிலேயே மூன்றாவது கண் அதிகம் கொண்ட நகரமாக மாறிய தலைநகர்

நாட்டிலேயே மூன்றாவது கண் என்றழைக்கப்படும் சிசிடிவி கேமராக்களை அதிகம் கொண்ட நகரமாக தலைநகர் தில்லி மாறியிருப்பதோடு, உலகளவிலும் அது முதல் இடத்தைப் பிடித்திருப்பதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
உலகிலேயே மூன்றாவது கண் அதிகம் கொண்ட நகரமாக மாறிய தலைநகர்
உலகிலேயே மூன்றாவது கண் அதிகம் கொண்ட நகரமாக மாறிய தலைநகர்

நாட்டிலேயே மூன்றாவது கண் என்றழைக்கப்படும் சிசிடிவி கேமராக்களை அதிகம் கொண்ட நகரமாக தலைநகர் தில்லி மாறியிருப்பதோடு, உலகளவிலும் அது முதல் இடத்தைப் பிடித்திருப்பதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

போர்ஃப்ஸ் இந்தியா வெளியிட்ட புள்ளி விவரத்தின் அடிப்படையில், நாட்டிலேயே 2.5 சதுர கிலோ மீட்டருக்கு 609.9 சிசிடிவி கேமரா என்ற வகையில் சென்னை மூன்றாவது இடத்தில் உள்ளது. மும்பை 157.4 சிசிடிவி கேமராக்களுடன் 18வது இடத்தைப் பிடித்துள்ளது.

தில்லியில், 2.5 சதுர கிலோ மீட்டர் தொலைவுக்கு 1,826 சிசிடிவி கேமராக்கள் இருப்பதாகவும், இது நியூ யார்க், லண்டன் மற்றும் ஷாங்காய் நகரங்களைக் காட்டிலும் மிக அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தியை தில்லி முதல்வர் அரவிந்த்  கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் இணைத்துள்ளார்.

அதில் ஃபோர்ப்ஸ் இந்தியா செய்தியை மேற்கோள்காட்டியுள்ளார். அந்த செய்தியில், உலகிலேயே ஒவ்வொரு 2.5 சதுர கிலோ மீட்டர் தொலைவுக்கும் 1,826.6 சிசிடிவி கேமராக்களுடன் தில்லி முதலிடத்திலும், 1,138 சிசிடிவி கேமராக்களுடன் லண்டன் இரண்டாமிடத்திலும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல, 609.9 சிசிடிவி கேமராக்களுடன் சென்னை மூன்றாமிடத்தையும், மும்பை 18வது இடத்தையும் பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அரவிந்த் கேஜரிவால் பதிவிட்ட சுட்டுரை பதிவில், உலகளவில், ஷாங்காய், நியூ யார்க், லண்டன் போன்ற நகரங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி அதிக சிசிடிவி கேமராக்களுடன் புது தில்லி முதலிடத்தைப் பிடித்திருப்பது குறித்து பெருமை கொள்கிறேன். இந்த சாதனையை நிகழ்த்தியதற்காக தில்லி அரசின் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன், இந்த திட்டத்தை ஒரு லட்சியமாகக் கொண்டு மிகுந்த சிரத்தையுடன் குறைந்த நேரத்தில் செய்து முடித்தமைக்காக பாராட்டுகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், தில்லியில் அதிக சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி சாதனை படைப்போம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டிலேயே சென்னையை விட மூன்று மடங்கும், மும்பையை விட 11 மடங்கு அதிக சிசிடிவி கேமராக்களைக் கொண்ட நகரமாக தலைநகர் மாறியுள்ளது.

உலகளவில் அதிக சிசிடிவி கேமராக்களைக் கொண்ட முதல் 20 நகரங்களைக் கொண்ட பட்டியலில் தில்லி முதல் இடத்திலும், லண்டன் இரண்டாம் இடத்திலும், சென்னை மூன்றாம் இடத்திலும் உள்ளன. இந்த 20 நகரங்களைக் கொண்ட பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த தில்லி, சென்னை, மும்பை என மூன்று நகரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மும்பை 2.5 சதுர கிலோ மீட்டருக்கு 157 கேமராக்களுடன் 18வது இடத்தைப் பிடித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com