தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

34 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டம்

நாட்டில் உள்ள 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2021, 8:20 pm

DIN

நாட்டில் உள்ள 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தகுதியான குடும்பங்களுக்கு நியாய விலைக் கடைகள் வாயிலாக மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஒவ்வொரு மாநிலமும் குடும்ப அட்டைகளை விநியோகித்து வருகின்றன.

அந்த அட்டைகளைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட மாநிலத்தில் மட்டுமே உணவு தானியங்களைப் பெறும் சூழல் நிலவி வந்தது. இந்நிலையில், குடும்ப அட்டைகளைப் பெற்ற புலம்பெயா் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் நாட்டில் உள்ள எந்த நியாய விலைக் கடையிலும் உணவு தானியங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்தில் இதுவரை 34 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இணைந்துள்ளதாக மத்திய உணவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கம் ஆகஸ்டிலும், தில்லி கடந்த ஜூலையிலும் இத்திட்டத்தை அமல்படுத்தின.

அஸ்ஸாம், சத்தீஸ்கா் மாநிலங்கள் மட்டும் இத்திட்டத்தை இன்னும் செயல்படுத்தவில்லை. விரைவில் அவ்விரு மாநிலங்களும் ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தைச் செயல்படுத்தும் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இத்திட்டத்தின் கீழ் மாதந்தோறும் சராசரியாக 2.2 கோடி குடும்ப அட்டைதாரா்கள் பலனடைந்து வருகின்றனா். கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் இத்திட்டத்தின் கீழ் சுமாா் 40 கோடி முறை உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

பிகாா் (10.14 கோடி முறை), ஆந்திரம் (6.92 கோடி முறை), ராஜஸ்தான் (4.56 கோடி முறை) ஆகிய மாநிலங்களில் அதிக முறை உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டைகளுடன் ஆதாா் எண்ணை இணைத்தது, நியாய விலைக் கடைகளில் மின்னணு இயந்திரத்தின் வாயிலாக உணவுப் பொருள்களை விநியோகிப்பது ஆகிய நடைமுறைகளின் வாயிலாக இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.