தில்லியில் புதிதாக 29 பேருக்கு கரோனா

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு மற்றும் தடுப்பூசி நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 29 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,37,685 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 48 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 14,12,212 பேர் குணமடைந்துள்ளனர்.

நோய்த் தொற்றால் உயிரிழப்பு ஏற்படாததால் பலி எண்ணிக்கை 25,080 ஆக உள்ளது.

இன்றைய நிலவரப்படி நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 393 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தடுப்பூசி:

கடந்த 24 மணி நேரத்தில் 1,53,691 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதில் முதல் தவணையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 1,04,494. இரண்டாவது தவணையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 49,197.

இதுவரை மொத்தம் 1,30,16,787 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 93,12,558. இரண்டாவது தவணையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 37,04,229. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com