/

கேரளத்தில் தொடரும் கனமழை: 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளத்தின் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
கேரளத்தில் தொடரும் கனமழை: 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை
Updated On :28 ஆகஸ்ட் 2021, 11:05 am

DIN

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளத்தின் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் தென்மேற்கு பருவக்காற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாநிலத்தின் பெருவாரியான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் அதிகரித்துவரும் கனமழை காரணமாக மாநிலத்தின் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மற்றும் நாளை அதிதீவிர கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கேரளத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.