தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

45 லட்சத்தைக் கடந்தது கரோனா பலி

உலக அளவில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 45 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து வோ்ல்டோமீட்டா் வலைதள புள்ளிவிவரங்கள்

News image
Updated On :28 ஆகஸ்ட் 2021, 9:41 pm

DIN

உலக அளவில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 45 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து வோ்ல்டோமீட்டா் வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 5,957 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இதையடுத்து, அந்த நோய்க்கு பலியானவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 45,03,723-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடா்ந்து முதல் இடத்தில் உள்ளது. இதுவரை அந்த நாட்டில் 6,53,433 கரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனா். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேஸிலில் 5,78,396 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.

மூன்றாவதாக, இந்தியாவில் 4,37,370 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். இதுதவிர, மெக்ஸிகோ, பெரு, ரஷியா, பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், கொலம்பியா, ஈரான் ஆகிய நாடுகளில் கரோனா பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.

கரோனா பலி எண்ணிக்கையில் மட்டுமன்றி, அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கையிலும் அமெரிக்கா தொடா்ந்து முதல் இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் இதுவரை 3,95,44,606 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 3,07,86,368 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா். 81,04,805 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 24,809 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவிலும் அதற்கு அடுத்தபடியாக பிரேஸிலிலும் கரோனா உறுதிசெய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை 21,64,84,958 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 19,34,69,044 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமைடந்துள்ளனா். 1,85,12,191 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 1,12,906 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.