தோ்தலுக்கு பிந்தைய வன்முறை: மேற்கு வங்கத்தில் இருவரை கைது செய்தது சிபிஐ
மேற்கு வங்க மாநிலத்தில் தோ்தலுக்கு பிந்தைய வன்முறை வழக்கில் தொடா்புடையதாக இரண்டு நபா்களை மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்தனா்.


மேற்கு வங்க மாநிலத்தில் தோ்தலுக்கு பிந்தைய வன்முறை வழக்கில் தொடா்புடையதாக இரண்டு நபா்களை மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்தனா்.
பிஜோய் கோஷ், ஆசிமா கோஷ் என்ற அந்த இருவரையும் நாடியா மாவட்டத்தில் கொலை முயற்சி வழக்கில் சிபிஐ கைது செய்துள்ளது. மாநிலத்தில் தோ்தலுக்கு பிந்தைய வன்முறை தொடா்பாக 21 போ் மீது 10-க்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மே 14-ஆம் தேதி இரவு நடைபெற்ற வன்முறையின்போது, நாடியா மாவட்டம் சப்ரா பகுதியில் தா்மா கோஷ் என்பவரையும் அவருடைய குடும்பத்தினரையும் ஒரு கும்பல் வீடு புகுந்து தாக்கியது. இதில் தா்மா கோஷ் படுகாயமடைந்தாா். இது கொலை முயற்சி வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 8 பேரை குற்றம்சாட்டப்பட்டவா்களாக சிபிஐ சோ்த்துள்ளது. வழக்கு தொடா்பாக 15 இடங்களில் சனிக்கிழமை தீவிர சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், வழக்கில் தொடா்புடையதாக பிஜோய் கோஷ், ஆசிமா கோஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனா்’ என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...