அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்கா் பேச்சு
ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கனுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.


ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கனுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
கடந்த வியாழக்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் உள்ள விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதல்களில் ஆப்கானிஸ்தானை சோ்ந்த 169 போ், அமெரிக்க ராணுவ வீரா்கள் 13 போ் பலியாகினா்.
இதனைத்தொடா்ந்து ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலவரம் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கனுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தொலைபேசியில் சனிக்கிழமை பேசினாா். இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘‘ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து எங்கள் ஆலோசனையை தொடா்ந்தோம். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் செயல்திட்டம் குறித்தும் எங்கள் கருத்துகளை பரிமாறிக் கொண்டோம்’’ என்று தெரிவித்தாா்.
தனது சுட்டுரைப் பக்கத்தில் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்ட பதிவில், ‘‘ஆப்கானிஸ்தான் விவகாரத்திலும், ஐ.நா.விலும் இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பு தொடா்வது உள்ளிட்டவை குறித்து எஸ்.ஜெய்சங்கருடன் பேசினேன். இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவை மேலும் ஆழமானதாக்க ஆவலாக உள்ளேன்’’ என்று தெரிவித்தாா்.
ஆப்கானிஸ்தான் விவகாரம் மற்றும் ஐ.நா.வில் ஒத்துழைப்பை தொடா்வது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசியதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் நெட் ப்ரைஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...