"கரோனா இரண்டாவது அலை தாக்கியபோது, மக்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதில் ஆயுஷ் மருத்துவம் முக்கிய பங்கு வகித்தது' என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார்.
உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூரில் மகா யோகி குரு கோரக்நாத் ஆயுஷ் விஸ்வ வித்யாலயாவுக்கு (ஆயுஷ் பல்கலைக்கழம்) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினார். பூமி பூஜையில் ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர். விழாவில் ராம்நாத் கோவிந்த பேசியதாவது:
நாட்டில் கரோனா தாக்கியபோது, குறிப்பாக, இரண்டாவது அலையின்போது மக்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, அவர்களைத் தொற்றில் இருந்து பாதுகாப்பதில் ஆயுஷ் மருத்துவம் முக்கிய பங்கு வகித்தது.
மூலிகைகள் மற்றும் மூலிகை மருந்துகள் பற்றி பாரம்பரியமாக பழங்குடிச் சமூகத்தினர் அதிகம் அறிந்து வைத்திருக்கிறார்கள். இருப்பினும் கடந்த 20 ஆண்டுகளில், நாடு முழுவதும் ஆயுஷ் மருத்துவம் பிரபலமடைந்துள்ளது. மூலிகைகள் மற்றும் மூலிகை மருந்துகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள், வனப்பகுதியில் வசிப்பவர்களின் வருவாய் அதிகரித்துள்ளது. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது.
யோகப் பயிற்சி, ஒரு மனிதனுக்கு ஆக்கபூர்வமான ஆற்றலைத் தருகிறது. அவரை உடலளவிலும் மனதளவிலும் வலிமையுள்ளவராக மாற்றுகிறது. கவலையும் மனஅழுத்தமும் நிறைந்த இந்த நவீன யுகத்தில், மனிதனுக்கும் இயற்கைக்குமான நல்லிணக்கம், யோகப் பயிற்சி மூலம் கிடைக்கிறது.
மகாத்மா காந்தி, இயற்கை மருத்துவத்தின் ஆதரவாளராக இருந்தார். உடல்நோய்களுக்கான தீர்வு இயற்கையில் இருக்கிறது என்று அடிக்கடி கூறுவார். மாணவர்கள் தங்கள் கிராமத்தைப் பற்றியும் அந்த கிராமத்தின் விவசாயம் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதேபோல், நமது உடலமைப்பு பற்றியும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
கிராமங்களில் விளையும் தானியங்கள், பயிர்கள், வயல் வெளியில் இருக்கும் செடி, கொடி போன்ற தாவரங்கள் பற்றியும் மாணவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நம்மைச் சுற்றியிருக்கும் மூலிகைகளைப் பயன்படுத்தி, பொதுவான நோய்களைக் குணப்படுத்தினால் மருத்துவத்துக்கான செலவு குறையும். வாழ்க்கையும் எளிதாகும். தாதுக்களையும் உலோகங்களையும் பயன்படுத்தி மருந்து தயாரித்தவர்களில் முக்கியமானவர் பாபா கோரக்நாத். எனவே, அவருடைய பெயரை இந்தப் பல்கலைக்கழகத்துக்கு சூட்டுவது பொருத்தமாக இருக்கும்.
ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம், யுனானி, ஹோமியோபதி ஆகிய மருத்துவ முறைகளை ஊக்குவிக்க மத்திய அரசு கடந்த 2014-இல் ஆயுஷ் அமைச்சகத்தை அமைத்தது. அதைப் பின்பற்றி, உத்தர பிரதேச அரசு கடந்த 2017-இல் ஆயுஷ் துறையை அமைத்தது
பாராட்டுக்குரியது.
பொது நலனுக்கான எந்தவொரு விஷயத்தையும் பின்பற்றுவதற்கு மக்கள் தயங்குவதில்லை. சித்தா, ஆயுர்வேதம், யோகா ஆகியவை உலகுக்கு இந்தியா அளித்த கொடையாக விளங்குகின்றன. ஒருங்கிணைந்த மருத்துவ முறை என்ற யோசனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து அங்கீகாரம் கிடைத்து வருகிறது என்றார் ராம்நாத் கோவிந்த்.
சர்வதேச அங்கீகாரம் - யோகி ஆதித்யநாத்: விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், "பிரதமர் மோடி மேற்கொண்ட முயற்சியால் இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. அவருடைய முயற்சியால்தான் ஜூன் 21-ஆம் தேதி, சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்று பரவியபோது, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதற்கு ஒட்டுமொத்த உலகமும் இந்திய பாரம்பரிய மருத்துவமுறைகள் பின்பற்றியது. அதன் பிறகே உத்தர பிரதேசத்தில் ஆயுஷ் பல்கலைக்கழகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சசிகுமாரின் வதந்தி - 2 டீசர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு... கண்ணீர் விட்டு கதறி அழுத பாஜக நிர்வாகி!

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
வீடியோக்கள்

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

"வெறுப்பு அரசியல் என்ற முள்ளை எடுக்கும் மலர்": சா.பீட்டர் அல்போன்ஸ் புகழாரம்
தினமணி வீடியோ செய்தி...

DMK vs CPIM: தொகுதிப் பங்கீட்டில் நடப்பது என்ன?
தினமணி வீடியோ செய்தி...

"இதழியல் வரலாற்றில் மைல்கல் ஈகைப் பெருநாள் மலர்": டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்
தினமணி வீடியோ செய்தி...

