டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சிவகங்கை காஞ்சிரங்கால் கிராம மக்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

சிவகங்கை அருகேயுள்ள காஞ்சிரங்கால் கிராம மக்களுக்கு பிரதமர் மோடி தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2021, 11:23 am

DIN

சிவகங்கை அருகேயுள்ள காஞ்சிரங்கால் கிராம மக்களுக்கு பிரதமர் மோடி தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். 

இன்று 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய பிரதமர் மோடி, காஞ்சிரங்கால் கிராம மக்களுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் கிராமத்தில் உள்ள மக்கள் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரித்து தங்களின் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்துகொள்கின்றனர். 

இதையடுத்து காஞ்சிரங்கால் கிராம மக்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்ததுடன் அவர்கள் நாட்டுக்கே முன்னுதாரணமாகத் திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

சிவகங்கை அருகே உள்ள காஞ்சிரங்கால் ஊராட்சி ஒன்றியத்தில் காய்கறிக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம், ஊராட்சிக்கு பயன்படுத்தப்படும் பேட்டரி வாகனங்களை ரீசார்ஜ் செய்வது, தெருவிளக்குகளுக்கு பயன்படுத்துவது, அரசு கட்டிடங்களில் மின்சாரத் தேவை ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.