டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து; மேஜர் தயான்சந்த்-ஐ நினைவுகூர்ந்த பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். 

News image
Updated On :29 ஆகஸ்ட் 2021, 7:04 am

DIN

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். 

இன்று 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசிய அவர், 

நாளை கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணன் அவதரித்த நாள். கிருஷ்ண ஜெயந்திக்குக்கு உங்களை வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

மேலும் இந்நாளில் தேசத்தின் சிறந்த பாரம்பரியங்களை முன்னெடுத்துச் செல்லுமாறு நாட்டு மக்களை வலியுறுத்துகிறேன். இந்திய ஆன்மீகம் மற்றும் தத்துவ முறைகளுக்கு  உலக நாடுகள் மரியாதை செலுத்துகின்றன. 

இன்று மேஜர் தயான்சந்தின் பிறந்தநாள். அவருடைய நினைவை போற்றும் வகையில் இந்நாள் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. 

41 ஆண்டுகள் கழித்து டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டிக்கு உயிரூட்டி இருக்கின்றனர் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணி. 

இன்றைய இளைஞர்களின் மனங்கள் பழமைவாதமான வழிமுறைகளை விட்டு விலகி புதிய ஒன்றை சாதிக்க விரும்புகின்றன. 

இந்திய பொம்மை சந்தையை உலகளவில் விரிவுபடுத்துவதை இளைஞர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர். பொம்மை தயாரிப்பில் செயல்முறைகள், பல்வேறு, தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் மற்றும் புதிய விஷயங்களை பரிசோதிப்பதில் இளைஞர்கள் இன்று கவனம் செலுத்துகின்றனர். 

இதில் கல்லூரி, பல்கலைக்கழங்கள், பரிசோதனைக் கூடங்களில் பணியாற்றும் மாணவர்களின் பங்களிப்பு பெரிய அளவில் இருக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. 

கல்லூரி பல்கலைக்கழக மாணவர்கள், தனியார் துறையில் வேலை பார்க்கும் இளைஞர்கள் எல்லாம் உற்சாகத்தோடு விண்வெளித்துறையில்  பணியாற்ற ஆர்வத்துடன் உள்ளனர். 

இன்றைய இளைஞர்கள், விளையாட்டுக்களை ரசிக்க மட்டுமே செய்கிறார்கள் என்பதல்ல, அவர்கள் அவற்றோடு தொடர்புடைய அனைத்தையும் கவனிக்கின்றனர். அதன் ஒட்டுமொத்த சூழல் அமைப்பையும், மிக நுணுக்கமாகப் பார்க்கிறார்கள். அவற்றின் வல்லமையைப் புரிந்து கொள்கிறார்கள் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.