/

வெள்ள பாதிப்பு நிவாரணம் ரூ.6,000: பிகார் முதல்வர்

பிகார் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.

News image
முதல்வர் நிதீஷ் குமார்
Updated On :28 ஜனவரி 2024, 4:02 am

DIN

பிகார் மாநிலத்தில்   வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு  நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.

பிகாரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.  இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் நிதீஷ் குமார் நேரில் சென்று பார்வையிட்டார். 

ஹெலிகாப்டர் மூலமாக வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அவர், மீட்புப் படையினர் உதவியுடன் படகு மூலம் சென்று மக்களிடம் நலம் விசாரித்தார்.

அப்போது மக்களிடம் பேசிய அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் ரூ.6 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். 

தர்பங்கா மாவட்டம் முழுவதையும் பார்வையிட்டேன். சில பகுதிகளில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.