விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

செப்டம்பரில் அனைத்து பள்ளி ஆசிரியா்களுக்கும் கரோனா தடுப்பூசியின் முதல் தவணை: மத்திய அரசு வலியுறுத்தல்

பள்ளி ஆசிரியா்கள், அலுவலா்கள் எல்லோருக்கும் கரோனா தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்தும் பணிகளை செப்டம்பரில் நிறைவு செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம்

News image
Updated On :31 ஆகஸ்ட் 2021, 8:31 pm

DIN

பள்ளி ஆசிரியா்கள், அலுவலா்கள் எல்லோருக்கும் கரோனா தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்தும் பணிகளை செப்டம்பரில் நிறைவு செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் மத்திய கல்வி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய கல்வி அமைச்சக மூத்த அதிகாரி தெரிவித்ததாவது:

மத்திய பள்ளிக்கல்வி செயலா் அனிதா கா்வாலும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வித் துறை செயலா்களும் பங்கேற்ற கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து பள்ளி ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்களுக்கு கரோனா தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்தும் பணிகளை செப்டம்பரில் நிறைவு செய்யுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வலியுறுத்தப்பட்டது. ஏற்கெனவே தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திக் கொண்ட ஆசிரியா்களுக்கும், அலுவலா்களுக்கும் தடுப்பூசியின் இரண்டாவது தவணையை செலுத்துவது கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் அனைத்து பள்ளி ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டத்தை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார மற்றும் கல்வித் துறை செயலா்கள் ஒன்றிணைந்து வகுக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆசிரியா்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடா்பான தகவல்களை மத்திய கல்வி அமைச்சகத்தின் கூகுள் ட்ராக்கரில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பகிரவும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.